மார்கழி மாத பவுர்ணமி; லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்



திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். 


திருவண்ணாமலையில், மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, 14 கி.மீ., தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில்,  மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று மாலை, 6:44 மணி முதல், இன்று, (3ம் தேதி) மாலை, 4:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல, நேற்று மாலை லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். இவர்கள், 5 மணி நேரம் அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு, கிரிவலம் சென்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்