இராமானந்த சுவாமிகள் 69வது ஆண்டு நிறைவு குருபூஜை விழா நிறைவு



கோவை: சின்னவேடம்பட்டி சிரவையாதீனம் அரங்கில் இராமானந்த சுவாமிகள் 69வது ஆண்டு நிறைவு குருபூசை விழா நடந்தது. நிகழ்ச்சியில் சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள் கருணைக் கல்வியாளர் விருதினை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிக்கு வழங்கினார். 


சின்னவேடம்பட்டியில் உள்ள சிரவையாதீன ஆதிகுரு ராமனந்த சாமிகளின் 69வது ஆண்டு நிறைவு குரு பூஜை விழா நேற்று துவங்கியது. நிறைவு நாளான இன்று சிரவையாதீனம் குமரகுருபர சாமிகள் தலைமையில், 14 சுவடி பதிப்பு நுால்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பேருராதீனம் மருதாசல அடிகள் நுால்களை வெளியிட்டார். பழனி சாதுசண்முக அடிகள், மவுன சிவாச்சல அடிகள், தென்சேரி மலை முத்து சிவராம அடிகள் உள்ளிட்டோர் நுால்களை பெற்றனர். சிறப்பு விருதுகளை அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, அவிநாசிலிங்கம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேல் உள்ளிட்டோர் பெற்றனர். மாலையில் ரத ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து விருது பெற்றவர்களுடன் ஆதீனங்கள் தென்சேரிமலை ஆதீனம் முத்து  சிவராமசாமி அடிகளார், பழனியாதீனம் சாது சண்முக அடிகளார், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப நாமேவ சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்