உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், வேல் மாறல் பாரயணத்துடன் வேல் வழிபாட்டு வைபவம் நடந்தது. முருக பக்தர்கள் வழிபாட்டு மன்றம் சார்பில், வேல் மாறல் பாராயணத்துடன் இந்நிகழ்ச்சி துவங்கியது. காமாட்சி அம்மன் கோவில் தலைவர் நவநீதன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஆறுச்சாமி, கோவிந்தராஜ், அபெக்ஸ் சங்க தலைவர் சந்திரன், அரிமா சங்க நிர்வாகி மணி முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிர்வாகி ஆறுமுகம் நன்றி கூறினார்.