மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு



செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்று மார்கழி மாத ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். கோவிலில் லிங்கம் அணிந்து பூஜை செய்யும் 7 வம்சா வழி பூசாரிகள் சன்னு முனிவர் சமாதியில் லிங்கம் அமைத்து, 501 கிலோ எடை கொண்ட செண்பகம், சங்குபுஷ்பம், செவ்வந்தி, ரோஜா உள்ளிட்ட 27 வகை பூக்களை கொண்டு அர்ச்சனையும் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள், பூசாரிகள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்