கோவை: ஸ்ரீ சபரிச சேவா சங்கம் 13ம் ஆண்டு ஸ்ரீ தர்ம சாஸ்தா மகோத்சவம் கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் வி. என். ஜி. கல்யாண மண்டபத்தில் இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற்றது. இதில் சுவாமி ஐயப்பனின் திரு உருவ சிலைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் நிறைவாக புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சபரிமலை 18 படி போன்று அமைத்து அதில் பல வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.