486 ஆண்டு பழமையான ஹலே கோட்டே ஆஞ்சநேயர் கோவில்



உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லின் மாவள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட சிராலி கிராமத்தில் அமைந்துள்ளது, ஹலே கோட்டே ஹனுமன் கோவில்.


இக்கோவிலுக்கு, 486 ஆண்டு வரலாறு உள்ளது. புராணங்களின்படி, கெருசொப்பே சீமையை ஆண்டு வந்த சால்வ கிருஷ்ணதேவராசா, இப்பகுதியில் கோட்டை ஒன்றை கட்டினார். அந்தக் கோட்டையை தன் நம்பிக்கைக்குரிய சங்கீதராயாவுக்கு கொடுத்தார். இதை பாதுகாக்கும் பணி, திம்மநாயக்காவிற்கு வழங்கப்பட்டது.


ஓடை அருகில் ஒரு காலத்தில், மஹாமண்லதீஸ்வரா உடையார் ஸ்ரீதேவராயா போர் தொடுத்தார். போரில், திம்மநாயக்காவை கொன்று, கோட்டையை கைப்பற்றினார். அதன் பின், கோட்டை சேதப்படுத்தப்பட்டது. பின்னொரு காலத்தில், மேலுகோட்டே ஸ்ரீராமானுஜ ஆச்சார்யாவின் சீடர் ஹிக்கேரி திருமலாதாத்தாச்சாரியார் பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். சாரதா ஓடை அருகே செல்லும் போது, இவரின் ஞான திருஷ்டியில் ஹனுமன் தோன்றினார். இதையடுத்து, சாரதா ஓடை அருகிலேயே, ஹனுமன் விக்ரஹத்தை நிறுவினார். அன்று முதல் ஹலே கோட்டை ஹனுமன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.


இப்பகுதியில் வசிக்கும் நாமதாரி சமூகத்தினர், ஹனுமனை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஹனுமனை மனமுருகி வேண்டினால் தைரியமும், பாதுகாப்பும் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு ஹனுமனை வேண்டி கொண்டால், நினைத்தது நிறைவேறி நேர்த்தி கடன் செலுத்துவர்.


சேதப்படுத்தப்பட்ட கோட்டை அருகில் இக்கோவில் கட்டப்பட்டு உள்ளது. 15 படிக்கட்டுகள் ஏறிய பின், கோவிலில் நுழையலாம். உள்ளே நுழைந்தவுடன், இருபுறமும் தசாவதார சிற்பங்களை தரிசிக்கலாம். அதை தாண்டி சென்றால், பாரம்பரிய கர்நாடக பாணியில் கோவில் கட்டப்பட்டு உள்ளது. தனி சன்னிதியில் விநாயகர் பூஜைகள் செய்யும் சடங்கு மண்டபம், அதை தாண்டி சென்றால், கோவில் மண்டபத்துக்குள் சென்றால், கருவறையில் ஹனுமனை தரிசிக்கலாம். தனி சன்னிதியில் விநாயகர் அருள்பாலிக்கிறார்.


இங்கு, 50 ஆண்டுகளாக இங்கு பல்லக்கு உத்சவம் நடந்து வருகிறது. இந்த பல்லக்கு, பைலுாரில் இருந்து புறப்பட்டு, நாமதாரி சமுதாயத்தினர் வசிக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படும். ஜனவரி – பிப்ரவரி இடைப்பட்ட நாளில் துவங்கும் இந்த பல்லக்கு ஊர்வலம், மார்ச் – ஏப்ரலில் முடிவடையும். ராமநவமி, நவராத்திரியின் 10 நாட்களும் வெள்ளி பல்லக்கு உத்சவம் நடக்கும். ஐந்து நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.




எப்படி செல்வது?


பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், பட்கல் சாலை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.


பஸ்சில் செல்வோர், பட்கல் சாலை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.


திருவிழா: ராமநவமி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாத பூஜை.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 25

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 5

மேலும்