இன்று தேய்பிறை பஞ்சமி; தடைகள் நீங்கி சந்தோஷ வாழ்வு பெற வாராகியை வழிபடுங்க..!



‌அமாவாசை, பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாம் திதி பஞ்சமி ஆகும். இது வாராகி அம்மனை வழிபட மிகவும் உகந்த நாள். தேய்பிறை பஞ்சமி திதியில் தான் வாராஹி அம்மன் அவதரித்தார். வீட்டில் விளக்கேற்றி வாராகிக்கு செம்பருத்தி சாற்றி வழிபட வேண்டும்.


பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற் கான மிக முக்கியமான நாள்.  சப்த மாதர்களில் அதீத வீரியமும் தீய சக்திகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு ஓடோடி வருபவள் வாராஹி தேவி. சப்தமாதர்களில் வாராஹியின் 12 திருநாமங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும்,  இந்தத் திருநாமங்களை செவ்வாய், வெள்ளி மற்றும் பஞ்சமி காலங்களில், உச்சாடனம் செய்யச் செய்ய... சொல்லச் சொல்ல நம்மை அரண் போல் வந்து காத்தருள்வாள் வாராஹி தேவி என்கிறார்கள் பக்தர்கள்.  வாராஹி - மனச் சஞ்சலங்கள், வீண் கலக்கம், சத்ரு பயம் ஆகியவற்றை விலக்கி, சந்தோஷ வாழ்வளிப்பாள். இன்று  வாராகியை வழிபட்டு சத்ரு பயம் நீங்கி சந்தோஷ வாழ்வு பெறுவோம்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்