புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி காலை அபிேஷக ஆராதனை, மகா தீபாரதனை நடந்தது. மாலையில் சீர்வரிசை எடுத்து வருதல், நிச்சயதார்த்தம், மாலைமாற்றுதல், நலங்கு வைத்தலை தொடர்ந்து லட்சுமி ஹயக்ரீவர் – ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.