உலகம்பட்டி சுப்பிரமணியசாமி கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்



எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இங்குள்ள ஞானியார் மடத்தில் பழமையான சுப்பிரமணியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பால்குடம், பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. உலகம்பட்டி நகரத்தார்கள், பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து முருகனை வழிபட்டனர். பகல் 11:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்