கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் குடம் எடுத்து பெண்கள் அபிஷேகம்



மேட்டுப்பாளையம்: காரமடை அருகே 101 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து, கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். காரமடை அருகே கோடதாசனூரில், ராயர் சுவாமி கோயிலில், கல்யாண சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. தைப்பூச விழாவின் ஒரு பகுதியாக இன்று கோடதாசனூர், மங்கலகரைபுதூர், டி.ஜி. புதூர், காந்திநகர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 101 பெண்கள் பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலை அடைந்தனர். கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்