வேண்டிய வரம் அளிக்கும் காசி விஸ்வநாதர்



வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும். காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால், அனைவருக்கும் அந்த கொடுப்பினை கிடைக்காது. காசியில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது, ஹிந்துக்களின் நம்பிக்கை. இந்த காரணத்தால் அங்கு செல்ல, மூத்த குடிமக்கள் விரும்புவர்.


காசி விஸ்வநாதரை தரிசிக்க, காசிக்கு செல்ல வேண்டியது இல்லை. கர்நாடகாவிலேயே உள்ளது. மாண்டியா மாவட்டம் ஹொசபூதநுார் கிராமத்தின் மத்திய பகுதியில், காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. 1276ல் ஹொய்சாள மன்னர் நரசிம்மன், மிகவும் ஆசையுடன் கட்டிய கோவில் இது.


மிகவும் அற்புதமான கட்டட வடிவமைப்பு உடையது. பல ஆண்டுகளாக இந்தக் கோவில், வெளி உலகிற்கு தெரியவே இல்லை. சமீப நாட்களாக இதன் சிறப்புக்கள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். சுற்றுலா துறையும், காசி விஸ்வநாதர் கோவிலை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த திட்டம் வகுத்துள்ளது.


இந்தக் கோவில் நட்சத்திர வடிவில் தென்படுகிறது. கலை நயமிக்க மண்டபங்களுடன் மூலஸ்தானம் அமைந்துள்ளது. உட்புறத்தில் விநாயகர், சப்த கன்னியர்கள், சூரியன், விஷ்ணு உட்பட, பலவேறு கடவுள்களின் விக்ரகங்கள் உள்ளன. இந்த காசி விஸ்வநாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர்; வேண்டிய வரங்களை அள்ளித்தருபவர் என, பக்தர்கள் நம்புகின்றனர்.


காசிக்கு செல்ல முடியாத பலரும், மாண்டியாவுக்கு வந்து காசி விஸ்வநாதரை தரிசனம் செய்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகின்றனர். இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், கோவில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பாகும். இங்கு வந்தால் மனம் அமைதி அடைவதாக, பக்தர்கள் கூறுகின்றனர். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்