அவிநாசி; அவிநாசி ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு பூச்சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி சேவூர் ரோட்டில் மடத்துப்பாளையம் பிரிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 44ம் ஆண்டு பூச்சாட்டு விழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், கிராம சாந்தி ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, படைக்கலம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று பூச்சாட்டு விழாவில்,50க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்கு எடுத்து ராக்காத்தம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். நாளை மஞ்சள் நீர்,அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.