பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் பூச்சாட்டு விழா



சத்தி; சத்தியமங்கலத்தை அடுத்த பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு பூச்சாட்டு விழா, நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. முன்னதாக தாரை, தப்பட்டை, பீனாட்சி வாத்தியம் முழங்கபடைக்கலம் எடுத்து வரப்பட்டது. முதலில் கோவில் எதிரே உள்ள மாதேஷ்வரர் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. பின் தெப்பக்குளம் பகுதியில் உள்ள சருகு மாரியம்மன், விநாயகர், நாகர் மற்றும் வனதேவதைகளுக்கு பூஜை செய்து, பண்ணாரி கோவிலுக்கு படைக்கலம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் பண்ணாரி மாரியம்மனிடம் பூவாக்கு கேட்கும் நிகழ்வு நடந்தது. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள், ‘அம்மா தாயே...பண்ணாரியம்மா’ என பக்திப்பெருக்குடன் குரல் எழுப்பினர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்