திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில், பழமைவாய்ந்த சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18ம் ஆண்டு தெப்பல் விழா, 20ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு, அன்று விழாவில், மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்க உள்ளது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, கோவில் அருகே உள்ள பெரியகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் அம்மன் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதற்காக, குளத்தில் இரும்பு பேரல், சவுக்கு மரக்கட்டை கொண்டு, தெப்பம் கட்டும் பணி நடக்கிறது.