பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள்



ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.


பங்குனி அமாவாசை யொட்டி இன்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்டதூரம் காத்திருந்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்