குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா துவக்கம்



மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியா தேவி கோவிலில், பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா துவங்கியது.


மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. கோவிலின், 38ம் ஆண்டு குண்டம் திருவிழா, நேற்று இரவு (17ம் தேதி) பூச்சாட்டுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சுவாமி மீது பூ மற்றும் பொரிகளை தூவி விழாவை துவக்கினர். 30ம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளன. 30ம் தேதி அம்மன் அழைப்பும், 31ம் தேதி ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வரப்பட உள்ளது. இரவு குண்டம் திறப்பும், ஏப்.,1ம் தேதி காலை பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. மதியம் அம்மனுக்கும், முனீஸ்வரருக்கும் அக்னி அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. இன்று அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்