பழநி ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக மார்.,20ல் நிறுத்தம்



பழநி; பழநி கோயில், ரோப் கார் சேவை மார்ச். 20 ல் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.


பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் முருகன் கோயில் செல்ல முடியும். தினமும் ஏராளமான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மார்ச்.20ல் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழநி கோயில் சென்றுவர வின்ச், படி பாதை, யானைப்பாதை ஆகியவற்றை பக்தர்கள் பயன்படுத்தலாம்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்