உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, கோவில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று மாரியம்மன் கோவில் வளாகத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து திருவிழா பணிகள் துவங்கின. வரும், 24ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, கம்பம் போடுதல் நிகழ்சியும், ஏப்., 2ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு துவக்கமும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்.,9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.