சேத்துார் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்



சேத்துார்; சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


இதனை முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரம் அபிஷேகங்களும் கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்ட பின் மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியை ஒட்டி அம்மன் தண்டியில் சப்பரத்தில் வீதி உலா வந்தார். விழா காலங்களில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா மார்ச் 29-ல் நடக்கிறது. ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்