சென்னை; மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவில் சுவாமி தங்க சவுடால் விமானத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவின் 4ம் நாளான நேற்று தங்க சவுடல் விமானத்தில், கபாலீஸ்வரர் வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர். விழாவில் 29ம் தேதி தேரோட்டமும், 30ம் தேதி அறுபத்து மூவர் உத்சவமும் நடக்க உள்ளன.