காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் மகோன்னத பாராயணம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத பாராயண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 


காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும், சென்னை ஸ்ரீ காமாக்ஷி ஸ்ரீ வித்யா ஸமிதியும் இணைந்து உலக நலன் வேண்டி நடத்தும், ‘காமாக்ஷி தாய்மடியில்’ என்ற மகோன்னத பாராயண நிகழ்ச்சி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இன்று மதியம் 2:00 மணிக்கு துவங்கியது. காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2,000 மாணவியர் பங்கேற்று பாராயணம் செய்தனர். உலக நன்மைக்காக நடைபெற்ற பாராயணத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்களும், பக்தர்களும் பங்கேற்று காஞ்சி xமடாதிபதிகளிaன் ஆசி பெற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்