தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏப்., 1ல் உத்திர திருவிழா



தொட்டண்ண நகர்: தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவிலில், வரும் 1ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

பெங்களூரு காவல்பைர சந்திரா, தொட்டண்ணா நகர் மலையில் அமைந்து உள்ளது தங்கமலை திருசுப்பிரமணிய சுவாமி கோவில். இக்கோவிலில் ஏப்., 1ம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் என்.பி. சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து காலை 10:00 மணிக்கு கோவில் தர்மகர்த்தா முனிராஜு, தலைவர் தயாளமணி ஆகியோர் முன்னிலையில் சிறப்பு பூஜையுடன் பால்குட ஊர்வலம் துவங்குகிறது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு, தொட்டண்ணா நகரில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் தீபாராதனை முடித்து, தங்கமலை முருகன் கோவிலை வந்தடையும்.

கோவில் மூலவருக்கு தங்க கிரீடம் செய்து அணிவிக்க, கோவில் நிர்வாகம் தீர்மானித்து உள்ளது. பக்தர்கள் தங்களால் முடிந்த நிதியுதவி வழங்கும்படி நிர்வாகத்தினர் கேட்டு கொண்டுள்ளனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி தலைவர்கள் ஆர்.பெருமாள், ஜனார்த்தன், பொருளாளர் மகேந்திரன், உதவி செயலர்கள் சேகரன், பி.மோகன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

தொடர்புக்கு; 99729 99663, 98453 56637.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்