செங்கல்பட்டு: ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ தர்மசம்வர்தனி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல ஆணடுகளாக கோவிலில், கொடிமரம் இல்லாமல் இருந்தது. அதன்பின், ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை சார்பாக, கோவில் வளாகத்தில் கொடிமரம் அமைக்க முடிவு செய்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பணிகளை துவக்கினர். கடந்த சில தினங்களுக்கு முன் கொடி மரம் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட அரசு வழக்கறிஞர் திருமுருகன், தாசில்தார் சிங்காரன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.