மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய அம்மன் கற்சிலையை வருவாய்த்துறையினர் கைப்பற்றினர். மாமல்லபுரம் கடற்கரையில், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, பயணியர் கூட்டம் களைகட்டியிருந்தது. அப்போது கடலில் இருந்து, ஒரு அம்மன் கற்சிலை அலையில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. அங்கு பாதுகாப்பிற்கு இருந்த கடலோர பாதுகாப்பு படையினர், அதை மீட்டு வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்தனர். வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.