தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் மின் அலங்கார தேர் பவனி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.



இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவையொட்டி நேற்று நடைபெற்ற மின் அலங்கார தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


இளையான்குடி அருகே தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழக முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வேண்டினர்.நேற்று இரவு 7:00 மணிக்கு மேல் கோயில் முன் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரில் அலங்காரங்களுடன் உற்ஸவர் அம்மன் எழுந்தருளியதை தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் தேரை கோயிலை சுற்றி எழுத்து வந்தனர்.தேர் நிலையை அடைந்தவுடன் அம்மனுக்கு அபிஷேக ,ஆராதனை நடைபெற்றன. விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கூட்டுறவு அதிகாரி பிராந்தமங்கலம் போஸ், பிராந்தமங்கலம் வெள்ளைச்சாமி தேவர் குடும்பத்தினர்,முன்னாள் எம்.எல்.ஏ.,மதியரசன்,கண்ணமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,அய்யாச்சாமி அறக்கட்டளை சேர்மன் கனகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்தனா, பரம்பரை அர்ச்சகர் பாண்டித்துரை கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்