மருபாய் கவதேவி கோவிலில் கும்பாபிஷேகம் செய்த காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்



மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 


காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பத்து நாட்கள் ஆன்மீகப் பயணமாக மும்பைக்கு வருகை தந்துள்ளார். ஏப்ரல் 6-ஆம் தேதி ஸ்ரீ சங்கர மடத்தில் கும்பாபிஷேகம் செய்த சுவாமிகள், இன்று ஏப்ரல் 9ம் தேதி ஸ்ரீ மருபாய் கவதேவி கோவிலில் கும்பாபிஷேகம் செய்து வைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இவ்விழாக்களுக்கான பூர்வாங்கச் சடங்குகளாக வேத யாகங்கள், ஹோமங்கள் மற்றும் பூஜைகள் முன்னதாகவே சிறப்பாக நடைபெற்றது. இன்றைய விழாவில் துவாரகா சாரதா பீடத்தின் ஆச்சார்யா ஸ்ரீ சதானந்த சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளுடன் சேர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது குறிபிடத்தக்கது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்