செம்மேடு காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் 12ம் தேதி கும்பாபிஷேகம்



பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி நடக்கிறது 

பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் அறநிலையத்துறையின் 1000 ஆண்டுகால பழமைவாய்ந்த காசி விசாலாட்சி அம்மன் உடனுறை காசிவிஸ்வநாத சுவாமி கோவில் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம்  12 ம்தேதி நடக்கிறது. இக்கோவில் சிவபெருமான், வரதராஜபெருமாள் இருக்கும் சிறப்புவாய்ந்த கோவிலாகும். 

இதையொட்டி காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு  இன்று காலை 9:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கோபூஜை, தனபூஜை, மகாகணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம்,நவக்கிரக ேஹாமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  நாளை காலை 9:00 மணிக்கு மங்கல இசை, பரிவாரமூர்த்தி கலாக்ர்ஷனம், மாலை 6:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்குகிறது. 11 ம்தேதி காலை 2ம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு 3 ம்கால பூஜை, நாளை மறுநாள் 12ம்தேதி காலை 6:00 மணிக்கு 4ம்கால பூஜை, காலை 9:30 மணிக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.  வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு lநாளை 10 ம்தேதி மாலை 5:30 மணிக்கு பகவத்பூஜையுடன் துவங்கி முதல் கால யாகவேள்வி , பூர்ணாகுதி, நாளை 11 ம்தேதி காலை 7:30 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப பூஜை, 2ம்கால யாக வேள்வி பூர்ணாகுதி சாற்றுமுறை. மாலை 3ம்கால யாகவேள்வி பூர்ணாகுதி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பக்தி இசை ஐதராபாத் சிவா நிகழ்ச்சியும், 12 ம்தேதி காலை கோபூஜை, சுப்ரபாதம், அக்னி ஆராதனை, 4ம்கால யாகவேள்வி, பூர்ணாகுதி, காலை 9:00மணிக்கு கடம்புறப்பாடாகி மகாசம்ப்ரோஷணம் நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை பஞ்சவடீ ஆஞ்சநேய கோவில் செயலாளர் நரசிம்மன்,கோவில் செயல்அலுவலர் சரவணரூபன், தக்கார் வசந்தம்,  மற்றும் ஊர் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.  

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்