திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.