சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரகம், தீமிதி விழா கோலாகலம்



ஸ்ரீராமபுரம்: ஸ்ரீராமபுரம் சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில், அக்னிகுண்ட கரக திருவிழா மற்றும் தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடக்கிறது.

ஸ்ரீராமபுரம் சுதந்திர நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவில். இக்கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக ஓம் சக்தி வீர பாஞ்சாலியம்மன் நாடக சபை சார்பில், கடந்த, 2ம் தேதி வில் வளைப்பு; 4ல் பகடை துயில், 5ல் அர்ஜுனன் தவசு, 7ல் கர்ணன் மோட்சம், 9ல் அறவான் கடபலி போன்ற நாடகங்கள் நடைபெற்றன. நேற்று பதினெட்டாம் போர் நாடகம் நடந்தது.

இந்த கோவிலின், 60ம் ஆண்டு அக்னி குண்ட மஹோத்சவ கரகத்திருவிழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது. இன்று கரக திருவிழாவும், தீமிதி விழாவும் விமரிசையாக நடக்கிறது.

இன்றிரவு, 7:30 மணிக்கு ஸ்ரீ சவுடேஸ்வரி கோவிலில் இருந்து புறப்படும் கரகம், கவுதமநகர், அனுமந்தபுரம், ஓக்லிபுரம், செல்வநகர், சாய்பாபாநகர், நியூ காளப்பா பிளாக், ராமசந்திரபுரம், பிரம்மானந்த மடம், தயானந்த நகர், பாஷ்யம் நகர், பிரகாஷ் நகர், பண்டிரெட்டி சதுக்கம் வழியாக, எல்.என்.புரம், மார்க்கெட், ஸ்ரீராம புரம், ஆஞ்சநேயா கோவில், பாப்பண்ணா பிளாக், சுதந்திர நகர் வழியாக திரவுபதி அம்மன் கோவிலுக்கு வந்து சேரும்.

பின், சேவா ஆஸ்ரமம் பள்ளி எதிரில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் தீமிதி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழா குழு தலைவர் குமார், ஒருங்கிணைப்பு தலைவர் ரவிகுமார், செயலர் குமாரவேலு, பொருளாளர் வேலு, துணைத்தலைவர் சங்கர், துணை செயலர் குணசேகரன், உறுப்பினர்கள் முருகன், நாராயணசாமி, சரவணன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்