அவிநாசி: அவிநாசி தாமஸ்புரம் பிளேக் மாரியம்மன் கோவில் 114ம் ஆண்டு பூச்சாட்டு விழா நடைபெற்றது.
அவிநாசி தாமஸ்புரம் பகுதியில் எழுந்தருளியுள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் 114ம் ஆண்டு பூச்சாட்டு விழா கடந்த 8ம் தேதி பூச்சாட்டு மற்றும் கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 114ம் ஆண்டு திருவீதி உலா, தீர்த்தக்குடம், சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படைக்கலம் எடுத்து அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் விழா, கம்பம் பிடுங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மஞ்சள் நீர் விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.