விழுப்புரம் மதுரைவீரன் கோவிலில் சித்திரை திருவிழா



விழுப்புரம்: விழுப்புரம் மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் 19ம் ஆண்டு சித்திரை பெருவிழா மற்றும் அலங்கார திருவிழா நடந்தது. விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இக்கோவிலில் நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனையும் 8:30 மணிக்கு சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், பொதுமக்கள் தங்களின் குடும்பத்தோடு பொங்கலிட்டு சுவாமிக்கு படையலிட்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 7.30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து வரும் 26ம் தேதி தெருக்கூத்து நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் வாசுதேவன் செய்திருந்தார். 


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்