காஞ்சி சித்ரகுப்த சுவாமி கோவிலில் வரும் 30ல் திருக்கல்யாண வைபவம்



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சித்ரகுப்த சுவாமி கோவிலில் வரும் 30ம் தேதி திருக்கல்யாண வைபவமும், மே 1ம் தேதி சித்ரா பவுர்ணமி சிறப்பு தரிசனமும் நடக்கிறது.


காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில், கேது கிரகத்தின் பரிகார ஸ்தலமான கர்ணகி அம்பாள் சமேத சித்ரகுப்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத பவுர்ணமியன்று, சித்ரா பவுர்ணமி திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடக்கும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருக்கல்யாண வைபவம் மற்றும் வீதியுலா வரும் 30ம் தேதி நடை பெறுகிறது. விழாவையொட்டி அன்று காலை 8:00 மணிக்கு நவகலச பூஜை ஹோமம் நடக்கிறது. மாலை 6:00 மணியில் இருந்து, இரவு 8:30 மணிக்குள் திருக்கல்யாண வைபவமும், தொடர்ந்து வீதியுலாவும் நடக்கிறது. மே 1ம் தேதி, காலை 5:30 மணி முதல், இரவு 10:00 மணி வரை சித்ரா பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் அமுதா, இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் ஜெயா, அறங்காவலர் குழு தலைவர் பாலசந்தர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ரகுராமன், டாக்டர் வி.கே.ஜெயகரன், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்துள்ளனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்