உத்தர பிரதேசம்: வைசாக அமாவாசைத் திருநாளையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
இன்று வைசாக மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் அமாவாசை தினமாகும். தங்கள் முன்னோர்களின் ஆன்ம அமைதிக்காக, இந்த அமாவாசை நாளில் புனித நீராடுவதற்காக மக்கள் பிரயாக்ராஜிற்கு வருகை தந்தனர். அவர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.