பொள்ளாச்சி கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.


பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தியையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தியையொட்டி காலை, 10:30 மணிக்கு திவ்ய திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு ராமானுஜர் நுாற்றந்தாதி சேவிக்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. இதுபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்