உடுமலை: தளி கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
உடுமலை அருகே தளியில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 10ம் தேதி கருப்பராயன்சாமி வழிபாடு, விநாயகர் பொங்கல் வைத்தல்நிகழ்ச்சி நடந்தது. கம்பம் போடுதல்நிகழ்ச்சி கடந்த 14ல் நடந்தது. 17ல், திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இந்த வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோட்டை மாரியம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் பூவோடு எடுத்து வந்தனர். இன்று (23ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும், நாளை (24ம் தேதி) அம்மனுக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.