தாயுமானவர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா



ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் உள்ள தாயுமானவர் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

சிறு வயதில் இறை சிந்தனை கொண்ட தாயுமானவர் சன்னியாச வாழ்க்கைக்கு மாறி திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் சென்றார். அப்போது ராமநாதபுரம் வந்தவர் காட்டூரணி குளக்கரையில் உள்ள புளிய மரத்தடியில் தவம் இருந்தார். நீண்ட காலம் தவம் இருந்ததால் அவரின் உடல் மெலிந்து எலும்புக் கூடாக மாறியள்ளது.

இதனை கண்ட சிலர் யாரோ ஒருவர் இறந்ததாக கருதி இலைச்சருகோடு சேர்த்து உடலுக்கு தீ மூட்டினர். நெருப்பின் வெப்பம் உணர்ந்து கண்விழித்து பார்த்த தாயுமானவர் விழித்த நிலையில் இறை ஜோதியில் கலந்தார். பின்னர் உடலை மீட்டு லெட்சுமிபுரத்தில் சமாதி அமைத்தனர். தாயுமானவர் தவக்கோலத்தில் இருந்த 300 ஆண்டுகள் பழமையான புளிய மரத்தடியில் ராமநாதபுரம் மன்னர் ராமநாதசேதுபதி 1971 நவ.,2ல் அவருக்கு சிலை வைத்து தவயோக சித்திலைய கோயில் கட்டினார்.

இந்த கோயிலில் நன்கொடையாளர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று யாகம் நடத்தி அன்னதானம் வழங்கப்படும். சித்திரை மாதத்தில் திருவிழா நடத்தப்படும். சித்ரா பவுர்ணமியான நேற்று தாயுமானவருக்கு பல்வேறு அபிேஷக ஆராதனைகள் நடந்தன.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே மணியன்பச்சேரி புல்லுடைய அய்யனார் கோயில், சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்