குஜராத்: சோமநாதர் கோவிலில் சோம்நாத் கோயில் 75 வது ஆண்டு மகோத்சவம் முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு பூஜை நடத்தினார்.
பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான குஜராத் சோமநாதர் கோயில் 75 வது ஆண்டு மகோத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோமநாதர் கோவில் அமிர்த மகோத்சவ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி விசேஷ மகா பூஜையில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் த்வஜாரோஹண சடங்குகள், பிரதிஷ்டை சடங்குகள் மற்றும் கோவில் கொடியேற்றம் ஆகியவற்றிலும் பங்கேற்று வழிபாடு செய்தார். மகோத்சவத்தின் போது, இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் அக்ரோபாட்டிக்ஸ் குழுவினர் சாகசங்களை நிகழ்த்தினர். இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரதமர் நெகிழ்ச்சி: இது குறித்து பிரதமர் மோடி தனது வலைதளப்பதிவில் கூறியதாவது; புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலின் பிரதிஷ்டையின் 75வது ஆண்டு விழாவில், சோமநாதரின் புனிதத் தலத்திற்கு வருவது ஒரு தெய்வீக அனுபவத்தைத் தந்துள்ளது. இந்த நல்வாய்ப்பில், கோயில் பாதையில் சோமநாதப் பெருமானின் பக்தர்களின் பக்தியையும் தீவிர உற்சாகத்தையும் காணும்போது, இதயம் நெகிழ்ந்து ஆழ்ந்துவிடுகிறது! புனரமைக்கப்பட்ட கோயிலின் பிரதிஷ்டையின்போது இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பெற்ற தெய்வீக அனுபவத்தை இன்று நான் இங்கே மீண்டும் பெற்றுள்ளேன். சோமநாதர் அமிர்த மகோத்சவத்தின் பக்திமயமான சூழல் எங்கும் ஒரு அசாதாரணமான ஆற்றலைப் பரப்புகிறது. இவ்வாறு பிரதமர் குறிபிட்டுள்ளார்.