துடியலூர் சக்தி மாரியம்மன் சித்திரை திருவிழா



துடியலூர்: துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயிலில், 27ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி பூச்சாட்டுதல், அம்மன் தங்க கவச அலங்காரம், திருவிளக்கு பூஜை, கம்பம் நடுதல், அம்மனுக்கு பட்டு சீர் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, மாவிளக்கு, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமையில் செய்யப்பட்டு இருந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்