திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்



திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், 11,000 பக்தர்கள் தீமிதித்தனர்.


திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சந்தன காப்பு, மகாபாரத சொற்பொழிவு நடந்து வந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை 6:45 மணிக்கு, 11,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து தீமிதித்தனர். அப்போது பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என, முழக்கமிட்டனர். இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 50,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபம் திமான் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மதியம் கோவில் வளாகத்தில், தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவுபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்