கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம்



காரைக்குடி: கோட்டையூரில் உள்ள கோட்டை நாச்சியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா இன்று நடந்தது.


கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து மாலையில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது. பாரி நகரில் உள்ள அம்மன் கோயிலில் இரவு தங்கி நாளை காலை தேர் மீண்டும் கோட்டையூர் கோயிலை வந்தடையும். தேரோட்ட நிகழ்ச்சியில் கோட்டையூர் கண்டனூர் பள்ளத்தூர் காரைக்குடி உட்பட சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்