வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா 63 நாயன்மார் வீதியுலா நடந்தது.



வில்லியனுார்:  திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா நேற்று ஆறாம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா கோலாகலமாக நடந்தது.

 வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி வரை தினம் ஒவ்வொரு மரபினர்கள் சார்பில் காலையில் சிறப்பு அபிேஷகமும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

 அதில் கடந்த 23ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.  நேற்று 6ம் நாள் வன்னியர் மரபினர்கள் சார்பில் நடந்த விழாவில்  காலை 6:00 மணியளவில்  63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணிக்கு மேல் பஞ்சமூர்திகள்,  63 நாயன்மார்கள் மற்றும் அக்கினி புத்திரன் வீதியுலா நடந்தது.  பகல் 12:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் மற்றும் மூலவருக்கு அபிேஷகமும், மாலை 4:00 மணியளவில் 6ம் திருவிழா மண்டபத்தில் சுவாமிகள் மண்டகப்படி மற்றும் தீபாராதனை நடந்தது.  இரவு 8:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள்  வெள்ளி யானை வாகனம், ரிஷபம் வாகனம், மயில் வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் இசை கச்சேரியும் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், நாராயணசாமி, ரவிக்குமார், செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நாளை (27ம் தேதி) இரவு திருக்கல்யாணம் உற்சவமும், முக்கிய விழாவாக நாளை மறுநாள் (28ம் தேதி) காலை 8:10 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது.  விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் அன்பழகன்,  அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்