எமனேஸ்வரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்



பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. மே 20 காலை கருட கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. தினமும் பெருமாள் அன்னம், சிம்மம், சேஷ, கருடன், அனுமார், யானை வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை 10:30 மணிக்கு வரதராஜ பெருமாள் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தது. பின்னர் பெருந்தேவி தாயார் சன்னதியில் திருக்கல்யாண மண்டபத் தில் ஊஞ்சல் சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் எழுந்தருளினார்.

அப்போது வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள் தங்களது தாலி கயிற்றை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து விவாக சடங்குகள் நிறைவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு பெருமாள் பூ பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அமர்ந்து பட்டனப்பிரவேசம் வந்தார்.

ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர். நாளை காலை குதிரை வாகனத்திலும், மாலை தேரில் அமர்ந்து ரத வீதிகளில் பெருமாள் வலம் வருகிறார். மே 29 கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்