ஐயப்பன் கோவிலில் உத்திர நட்சத்திர சிறப்பு வழிபாடு



அன்னூர்: அன்னூர் ஐயப்பன் கோவிலில், உத்திர நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது.

அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில், ஒவ்வொரு மாதமும், ஐயப்பனின் ஜென்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்தன்று, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஐயப்பனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஐயப்பன் உள் பிரகாரத்தில் உலா வந்து சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்