பாடலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி கோபுர தரிசனம்



கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி கோபுர தரிசனம் நடந்தது.

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், வீதியுலா நடந்து வருகிறது. 5ம் நாளான நேற்று காலை பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, யாக சாலை பூஜை நடந்தது.

பஞ்சமூர்த்தி உற்சவர்கள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. அதிகார நந்தி வாகனத்தில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மன், தாமரை வானகத்தில் பராசக்தி அம்மன், ஆடு வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகர் எழுந்தருளச் செய்து, அதிகார நந்தி கோபுர தரிசனம் நடந்தது. தொடர்ந்து, வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 30ம் தேதி காலை 7:30 மணிக்கு தேரோட்டம், 2ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்