மதுரை; மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவரின் ஜெயந்தி விழா நடந்தது. காலை 6:00 மணி முதல் ருத்ரஜபம், பாதுகைக்கு பக்தர்கள் பூஜை நடந்தன. காமாட்சி அம்மனுக்கு பலவகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. இதை வருடத்தின் ஒரு நாள் மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும். தொடர்ந்து ருத்ரஜபம், மேலுார் ஸ்ரீ சுந்தரேஸ்வரா வித்யாசாலா மாணவிகளின் பக்தி இன்னிசை நடந்தது. தொடர்ந்து மஹா பெரியவர், காமாட்சி அம்மனுக்கு அர்ச்சனையும் பக்தர்களுக்கு அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு மஹா பெரியவர் ரதம் வீதி உலா நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஸ்ரீ சக்ர ராஜேஸ்வரி பீடம் சுவாமி ராமானந்தர சரஸ்வதி தலைமையில் நாமசங்கீர்த்தனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.