அழகர் கோவில்; பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவிலாகும். இக்கோவிலில் உள்ள மூலவர் ஸ்ரீதேவி பூமி தேவி சமேத சுந்தரராஜ பெருமாள் மற்றும் உபசன்னதிகளிலும் சாதாரண பக்தர்கள் செல்லும் வழியிலேயே இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். இரண்டு கோவிலிலும் கோவில் மரியாதை அமைச்சருக்கு வழங்கப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. முன்னதாக அழகர் மலையில் உள்ள நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் தீர்த்தம் பிடித்து தலையில் தெளித்து கொண்டார் அங்குள்ள அம்மனை தரிசனம் செய்தார். பின்னர் ஆறாவது படை வீடு சோலை மலை முருகன் கோவிலில் சாதாரணமாக வரிசையில் பக்தர்களோடு சென்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வித்தக விநாயகர் சன்னதி அமைச்சர் ரமேஷ் சாமி தரிசனம் செய்தரர். இங்கும் கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அமைச்சர் பதினெட்டாம்படி கருப்புசாமி முன்புள்ள கடைகளில் ஆய்வு செய்தார் அப்போது பொருட்களின் விலை பட்டியல் வைக்க வேண்டும் என உத்திரவிட்டார். பின்னர் தூய்மை பணியில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படவில்லை என அமைச்சரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.