திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் நடந்த கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.