வடபத்ர மாரியம்மன் கோவில் தேர் திருவிழா



ரிஷிவந்தியம்: சாத்தப்புத்துார் கிராமத்தில் உள்ள வடபத்ர மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது.

ரிஷிவந்தியம் அடுத்த சாத்தப்புத்துார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபத்ர மாரியம்மமன் கோவில் தேர் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டிற்கான தேர் திருவிழா கடந்த 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.

நேற்று முன்தினம் காலை கழுமரம் ஏறுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் வடபத்ர மாரியம்மன் சுவாமியை எழுந்தருள செய்தனர்.

சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் கோவிலுக்கு சென்றடைந்ததும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். நாளை 15ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்