எஸ்.ஆர்.நகர்; திருப்பூர் குமரன் கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஸ்ரீ ஞான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மஹாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது; நேற்று காலை, கோபுர விமானம் மற்றும் ஸ்ரீ ஞான விநாயகருக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. கோவை மண்டல வீட்டு வசதி துணைப் பதிவாளர் செந்தில்நாதன், கல்லுாரி முதல்வர் வசந்தி, நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.