மதுராந்தகம்: சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆனி மாத பிரம்மோத்சவ விழாவை முன்னிட்டு, பந்தகால் நடும் விழா நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் குமார் தலைமையில், உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். ஜூலை 1ம் தேதி, திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது.